வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டபோது பொலிசாரால் கைதுசெய்யப்பட்ட 8 பேரும் சட்டவைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு இன்று அழைத்துவரப்பட்டனர்.
இன்று விடுமுறை தினம் என்பதால் சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் இல்லை. இதனால் வைத்தியசாலையில் வைத்து அவர்களுக்கான மாற்று ஆடைகள் வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. எனினும் சிறைக்காவலர்கள் அதற்கு அனுமதி வழங்கியிருக்கவில்லை. இதனால் கடந்த இருதினங்களாக அவர்கள் கைதுசெய்யப்படும் போது அணிந்திருந்த ஆடைகள் அணிந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.