இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரான இரா. சம்பந்தன் சற்றுமுன் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
91ஆவது வயதில் இவர் இயற்கை எய்தினார்.
இவரது மரணம் தொடர்பில் உறுதிப்படுத்துவதற்காக தொடர்புகொண்டபோது அவரது மெய்ப்பாதுகாவலர் ஒருவர் குறித்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
இலங்கையில் மிகவும் அரசியல் அனுபவம் வாய்ந்த தமிழ்த் தலைவரான இரா.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சம்பந்தனின் இறுதி கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் அவரது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.