கருணா அம்மான் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணிக்கும் ஐ.தே.கட்சியின் முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவம்சம் தலைமையிலான குழுவினருக்கும் இடையே விஷேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றிருந்தது.
இன்று (17.07.2024) மாலை 3 மணியளவில் சிறிகோத்தாவில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை நிர்வாக குழுவின் அழைப்பினை ஏற்று, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமைபீடம் கருணா அம்மான் தலைமையில், உப தலைவர் ஜெயா சரவணா மற்றும் செயலாளர் செந்தூரன் ஆகிய குழுவினர், ஐ.தே.கட்சியின் முன்னாள் அமைச்சராக உள்ள அகிலவிராஜ் காரியவம்சம் தலைமையில் முக்கிய கலந்துரையாடலை மேற்கொண்டிந்தனர்.
குறித்த கலந்துரையாடலில் வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கான பல்வேறு திட்டங்கள் தொடர்பாக விரிவாகவும், சிறப்பான முடிவுகளுடன் ஆராயப்பட்டு பேசப்பட்டதாக தெரியவருகிறது.