பாடசாலை செயற்பாடுகளை பூர்த்தி செய்ய போட்டோ கொப்பி இயந்திரம் வழங்கி வைப்பு.

கிளிநொச்சி மாவட்டத்தின் கல்லாறு வித்தியாலயத்திற்கு போட்டோ கொப்பி இயந்திரம் இன்றையதினம் வழங்கி வைக்கப்பட்டது.

பாடசாலை செயற்பாடுகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில், பாடசாலை சமூகத்தினால் ஈழவர் குழுமத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைய லண்டனில் உள்ள நோர்விச் தமிழ் பாடசாலையினால் 2,74,000 ரூபா பெறுமதியில் போட்டோ கொப்பி இயந்திரம் அன்பளிப்பு செய்யப்பட்டது.

இவ் இயந்திரத்தினை இன்றைய தினம் (29.07.2024) காலை அவர்கள் சார்பாக சென்ற முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜெகதீசன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் எனஸ்ரின் ஆகியோர் பாடசாலை சமூகத்திடம் கையளித்திருந்தனர்.

இந்த உதவி சுண்டிக்குளம் கல்லாறு வித்தியாலயத்தின் கல்வி நடவடிக்கைகளுக்கு மகத்தான பங்களிப்பாகும்.

Latest news

Related news