அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அளித்துள்ள உறுதிமொழி

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

நாட்டில் உள்ள அனைவரையும் ஒன்றிணைக்கும் அரசியல் சக்தி தேசிய மக்கள் சக்திதான் என்றும் அவர் கூறினார்.

தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம்

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

எமது நாடு எல்லா வகையிலும் பிளவுபட்டுள்ளது, இந்த பிளவுகளால் எமது நாடு முன்னோக்கி செல்ல முடியாது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக நாட்டின் பிளவுபட்ட யுகம் முடிவுக்கு கொண்டுவரப்படும்.

ஜனாதிபதி தேர்தலின் போது நாம் பலமான இயக்கம் என்பது வடக்கு மக்களுக்கு தெரியாது. அதனால் தான் பழைய அரசியல் கட்சியையே தெரிவு செய்தனர்.

நாட்டை கட்டியெழுப்புவதற்கு அதிகமான வேலைகளை  நாங்கள் செய்ய வேண்டியுள்ளது. அதற்காக தேசிய மக்கள் சக்தி கொண்ட அரசாங்கத்தை உருவாக்க வேண்டும்.

அனைத்து மக்களின் நம்பிக்கையை பெற்ற அரசியல் இயக்கமாக ஒன்றிணைவதன் மூலம் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் எனவும்

 

பல்வேறு பாதுகாப்பு காரணங்களுக்காக கையகப்படுத்தப்பட்ட வடக்கு மக்களின் காணிகள் மீண்டும் அவர்களுக்கே வழங்கப்படும். சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Latest news

Related news