வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான குத்துச்சண்டை போட்டியில் பதக்கங்களை பெற்று வித்தியானந்தா கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

2025ம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான மாகாண கல்வி திணைக்களத்தினால் 12,13/8/2025 அன்று முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியில் நடத்தபட்ட குத்துச்சண்டை போட்டியில் பங்குகொண்டு பல பதக்கங்களை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

குறித்த போட்டியில் சானுஜா, குயின்சி
தங்க பதக்கத்தினையும் ,விபுர்ஷன் வெள்ளி பதக்கத்தினையும், எழிலன் வெண்கலப் பதக்கத்தினையும் பெற்று பாடசாலைக்கும் முல்லை மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

குறித்த மாணவர்களுக்கான பயிற்சிகளை வித்தியானந்தா கல்லூரி பழைய மாணவர்கள் ஏற்பாட்டில் கா.நாகேந்திரன் (வள்ளுவன் மாஸ்ரர்) வழங்கி வருகின்றமையும்
குறிப்பிடதக்கது.



