ப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றார்கள். இங்கே சமையல், நகைச்சுவை இரண்டுக்குமே பஞ்சமில்லை.
அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் வெள்ளித்திரைக்குச் சென்ற கலக்கிக் கொண்டிருப்பவர்கள் நிறைய பேர் உள்ளனர். குறிப்பாக சொல்லப்போனால், புகழ், பாலா, குரேஷி, சிவாங்கிஎன்போரும் இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களே.
அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் கோமாளியாகக் கலந்துகொண்டு பிரபலமானவர் ஷக்தி
எப்பொழுதும் இன்ஸ்டாவில் லைவ்வில் பேசும் சக்தி, சமீபத்தில் ஒரு வீடியோவில் கையில் அடிபட்டு கட்டுடன், “ஹாய், நான் ஒரு சின்ன பிரேக் எடுக்கப் போறேன். மென்டலாவும் பிஸிகலாவும் மனதுக்கு ஒரு மாதிரியா இருக்கு. நான் இப்போ பழைய ஷக்தியா இல்லாத மாதிரி இருக்கு. மீடியால நிறைய விஷயத்த நான் புரிஞ்சிக்கிட்டேன்.
எல்லாத்தையும் இப்ப சொல்ல முடியாது. கொஞ்ச நாளைக்கு கண் காணாத இடத்துக்கு போயிட்டு வாரேன்” என மிகவும் எமோஷ்னலாக பேசியிருக்கிறார்.