உணவு விஷமடைந்தமையினால் மகா ஓயா நில்லம்ப பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் 40-இற்கும் அதிக மாணவர்கள் சுகவீனமடைந்துள்ளனர்.
குறித்த மாணவர்கள் தற்போது மகா ஓயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் இன்று(28) காலை உணவை உட்கொண்ட பின்னர் இவ்வாறு சுகவீனமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.