ரஷ்யாவில் பரபரப்பை ஏற்படுத்திய வாக்னர் கூலிப்படையானது தற்போது கலைக்கப்பட்டு, வாக்னர் கூலிப்படை தலைவன் பிரிகோஜின் தலைமையில் தற்போது பெலாரஸ் நாட்டில் 8,000 வீரர்களுடன் புதிதாக படை திரட்டப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், வாக்னர் அமைப்பினர் திடீரென ரஷ்யாவுக்கு எதிராக கடந்த சனிக்கிழமை திரும்பிய நிலையில் ரஷ்யாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
ரஷ்ய இராணுவ தலைமைக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட வாக்னர் கூலிப்படை, கடைசி கட்டத்தில் திட்டத்தை கைவிட, தற்போது அதன் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் பெலாரஸ் நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டிருந்தார்.
உக்ரைன் எல்லையில் இருந்து 142 மைல்கள் தொலைவில், கைவிடப்பட்ட இராணுவ முகாமை வாக்னர் கூலிப்படையினர் பயன்பாட்டுக்கு பயன்படுத்த பெலாரஸ் அரசாங்கம் அனுமதித்துள்ளது.
அணு ஆயுதங்கள் பெலாரஸ் நாட்டில் குவிப்பு
மேலும், வாக்னர் கூலிப்படையின் அனுபவம் மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றை தங்கள் நாடு பயன்படுத்திக்கொள்ளும் எனவும் பெலாரஸ் ஜனாதிபதி பகிரங்கமாகவும் அறிவித்திருந்தார்.
இதன்படி முதற்கட்ட நடவடிக்கையாக 8,000 வீரர்கள் வரையில் வாக்னர் கூலிப்படை திரட்டியுள்ளதாகவும், இவர்கள் உக்ரைனுக்கு ஊடுருவ வாய்ப்பிருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து உக்ரைன் தரப்பில் இருந்து பெலாரஸ் எல்லையில் இராணுவத்தை குவித்துள்ளனர். இதனையடுத்து, பெலாரஸ் நாட்டில் இருந்து ஆயுதம் மற்றும் இராணுவத்தினரை உக்ரைனுக்குள் அனுப்பி வைக்க ரஷ்ய இராணுவத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரஷ்யாவின் அணு ஆயுதங்களும் பெலாரஸ் நாட்டில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது