உலகளவில் நான்காம் இடம் பிடித்த இந்தியா – எந்த விடயத்தில் தெரியுமா..!

சமீபத்தில் நடத்தப்பட்ட மொழிகள் குறித்த ஆய்வின் படி, உலகளவில் 7 நாடுகளில் அதிக மொழிகள் மற்றும் பண்பாடுகள் உள்ளனவென மொழிகளை ஆய்வு செய்யும் எத்னலோக் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பசிபிக் கடலில், சுமார் 4,62,840 கிலோ மீட்டர் பரப்பளவுடன் தீவு நாடுகளில் மூன்றாவது பெரிய நாடாக பப்புவா நியூ கினி உள்ளது.

இங்கு டொக் பிசின், கிரி மற்றும் மோட்டு என இந்த 3 அதிகாரப்பூர்வ மொழிகளுடன் 840 மொழிகள் பேசப்படுவதோடு உலகளவில் அதிக மொழி பேசும் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

நான்காம் இடத்தில் இந்தியா

உலகளவில் அதிக மொழி பேசும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் இந்தோனேசியா உள்ளது. இந்த நாட்டின் ஆட்சி மொழியாக இந்தோனேசியன் இருந்தாலும், இந்நாட்டில் மொத்தம் 715 மொழிகள் பேசப்படுகிறது.

பட்டியலில் மூன்றாம் இடத்தில் நைஜீரியா உள்ளது. 200 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நைஜீரியா, ஆப்பிரிக்காவின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு மற்றும் அதன் மிகப்பெரிய ஜனநாயகம் நாடாக உள்ளது.

பல கலாசாரங்கள் மற்றும் மொழிகளை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. எத்னோலாஜின் படி, இந்தியா பட்டியலில் 456 மொழிகளுடன் நான்காம் இடத்தில் உள்ளது.

 

 

 

Latest news

Related news