தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரி ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக லண்டனில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில்  மதகுரு வேலன் சுவாமி உட்பட 5 தமிழர்கள் இலங்கை காவல் துறையினரால் காட்டுமிராண்டித் தனமாக தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டதனை கண்டித்து பிரித்தானியாவில் பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் நேற்றையதினம் இடம்பெற்றிருந்தது.

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக மக்களால் முன்னெடுக்கப்படும் தொடர் போராட்டத்தில் கடந்த மார்கழி 21ம் திகதி அன்று மதகுரு வேலன் சுவாமி உட்பட 5 தமிழர்கள் இலங்கை காவல் துறையினரால் காட்டுமிராண்டித் தனமாக தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டதனை கண்டித்தும், தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரியும் நேற்றையதினம் (03.01.2026) சனிக்கிழமை லண்டன் டோவ்னிங் (Downing street) பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது.

தமிழர்கள் ஓரணியில் ஒன்று பட்டு உரிமைக்காய் குரல் கொடுப்போம் எனும் தொனிப்பொருளோடு ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான புலம்பெயர் உறவுகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Latest news

Related news