பத்து கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான தங்க ஜெல் கரைசல் அடங்கிய 04 பொதிகளை விமான நிலைய கடமையில்லா வர்த்தக நிலைய ஊழியர் ஒருவர் தனது தனிப்பட்ட பகுதியில் மறைத்து வைத்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வெளியே எடுத்துச் சென்றதாக பாதுகாப்பு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
24 வயதுடைய இந்த யுவதி கட்டுநாயக்க விமான நிலைய கடமையில்லா வர்த்தக நிலையத்தின் அழகு நிலையத்தின் பணியாளராவார்.
அவர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து 05 கிலோவுக்கும் அதிகமான தங்க ஜெல் அடங்கிய 04 பொதிகளுடன் தனது அந்தரங்கப் பகுதியில் இருந்து புறப்பட்டுச் செல்லும் போது, விமான நிலைய பாதுகாப்பு கமெரா அமைப்பின் ஊடாக இந்த சம்பவத்தை அவதானித்த விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் குழு இவரை கைது செய்துள்ளது.
தற்போது இந்த யுவதியும் கைது செய்யப்பட்டுள்ள தங்க ஜெல் கையிருப்பும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.