உலகின் முதல் AI (artificial intelligence) செய்தி வாசிப்பாளர் அறிமுகம்

உலகின் முதல் AI (artificial intelligence) செய்தி வாசிப்பாளர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்று, ஒளிபரப்பில் அடுத்தகட்ட வளர்ச்சியாக செயற்கை நுண்ணறிவில் உருவாக்கப்பட்ட செய்தி வாசிப்பாளர் ஒருவரை அறிமுகம் செய்துள்ளது.

லிசா என பெயரிடப்படவுள்ள இந்த செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட செய்தி வாசிப்பாளர், ஒடியா மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் செய்திகளை வாசிக்கக் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளரால் பல மொழிகளிலும் செய்திகளை படிக்க முடியும் என்றும் ஒடியா மொழியை இன்னும் தெளிவாக வாசிக்க கற்றுக்கொடுக்க தொழில்நுட்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளர் லிசாவை இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக தளங்களிலும் பின் தொடரலாம் என அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Latest news

Related news