உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் தாக்குதலுக்கு களமிறக்கப்பட்டுள்ள 20 ரஷ்ய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை உக்ரைன் நகரங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ரஷ்யா ஏவிய 20 ஈரானிய ட்ரோன்களே இவ்வாறு உக்ரைன் விமானப்படையினால் இரவோடு இரவாக சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலின் போது மேலும் இரண்டு கலிபர் கப்பல் ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீவ் இராணுவ நிர்வாகம் வெளியிட்ட தகவல்
உக்ரைன் தலைநகரான கீவ் பிராந்தியம் நோக்கி முன்னெடுக்கப்பட்ட இந்த தாக்குதலில் பெரும்பாலான ட்ரோன்கள் ஈரானில் தயாரிக்கப்பட்ட dShahed ஆகும் என்றும் உக்ரைன் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, சமீபத்தில் உக்ரைன் மீது ரஷ்யா ஈரானிய ட்ரோன்கள் மூலம் நடத்திய பயங்கர வான் தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், 4 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் கீவ் இராணுவ நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.