அரச ஊழியர்களுக்கு சம்பளமற்ற விடுமுறை வழங்குவது தொடர்பான நடைமுறைகள் குறித்த சுற்றுநிருபமொன்றை அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு வௌியிட்டுள்ளது.
இதற்கமைய, சம்பளமற்ற விடுமுறையை பெற்றுக்கொள்ளும் அரச ஊழியர்களுக்கு தொழிலுக்காக வௌிநாடு செல்வதற்கு அல்லது உள்நாட்டில் தங்கியிருப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சம்பளமற்ற விடுமுறையைப் பெற்றுக்கொள்ளும்போது, சேவை மூப்பு மற்றும் ஓய்வூதிய சம்பளத்திற்கு பாதிப்பு ஏற்படாது எனவும், அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு வௌியிட்டுள்ள சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது