யாழில் மாணவர்கள் தங்கியிருந்த வீட்டின் மீது கொடூர தாக்குதல்-வெளியான அதிர்ச்சிக் காரணம்!

யாழ்ப்பாணம் மாவட்டம் – திருநெல்வேலி பகுதியில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்றைய தினம் (29-07-2023) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த வீடு ஒன்றின் மீது அதிகாலை இரு மோட்டார் சைக்கிளில் முகத்தை மூடியவாறு வந்த 4 பேர் கொண்ட குழுவினர் தாக்குதலை நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்

இதன்போது வீட்டின் தளபாடங்கள் மற்றும் ஜன்னல்கள் சேதமாக்கியுள்ளதுடன், தங்கியிருந்த மாணவர் ஒருவருக்கு சிறு காயம் ஏற்பட்டது.

சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Latest news

Related news