கொடுப்பனவுகளை பெறுவதற்கு தகுதியுடையவர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.
https://iwms.wbb.gov.lk/household/list
அரசாங்கத்தின் “அஸ்வெசும” நலன்புரி திட்டத்தின் கீழ் பண கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள தகுதி உடையவர்களின் பெயர் பட்டியல் தற்பொழுது வெளியாகி உள்ளது.
உங்கள் கிராம சேவகர் பிரிவை கொடுப்பதன் மூலம் இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.
குறித்த பட்டியலில் உங்கள் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதா அல்லது உங்கள் உறவினர் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதை பார்வையிட கீழே கொடுக்கப்பட்டுள்ள பெயர் பட்டியல் என்பதை அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
https://iwms.wbb.gov.lk/household/list
உதவித்தொகை பெற தகுதியானவர்களின் பெயர் நீக்கப்பட்டவர்கள் இருந்தால் அது தொடர்பில் மேல்முறையீடு செய்யலாம். அல்லது ஜூலை மாதத்திற்குப் பின்னர் இரண்டாம் கட்டமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்றும், உதவி பெற தகுதியில்லாத ஒருவரின் பெயர் இருந்தாலோ அது தொடர்பில் மேல்முறையீடு செய்யலாம் எனவும் நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும்’அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் கீழ், 40% குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு 4 பிரிவுகளில் நிதியுதவி வழங்கப்படவுள்ளது. மிகவும் ஏழ்மையான பிரிவில் உள்ள குடும்பத்திற்கு மாதம் 15,000 ரூபாவை அரசாங்கம் வழங்கும்.

