குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் வவுனியா பிராந்திய அலுவலகத்தின் சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானம்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் வவுனியா பிராந்திய அலுவலகத்தின் சேவைகள் இன்று(03) மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

அதனடிப்படையில், இன்று(03) முதல் வட மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு மாத்திரம் வவுனியா பிராந்திய அலுவலகத்தில் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக வவுனியா பிராந்திய அலுவலகத்திற்கு நாளாந்தம் அதிக எண்ணிக்கையிலான மக்கள் வருகை தருவதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சன நெரிசலை குறைப்பதோடு வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

Latest news

Related news