மொனராகலை- வெலியாய பகுதியில் வைத்தியர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் 42 வயதுடைய வைத்தியரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்கொலை என உறுதி
குறித்த வைத்தியரின் வீட்டிலேயே அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மரணத்துக்கான காரணங்கள் கண்டறியப்படாத நிலையில், பிரேத பரிசோதனையின்போது அவர் தற்கொலை செய்துகொண்டார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.