சென்னை முதல் கன்னியாகுமரி வரை சுமார் 3000 கிலோமீட்டர் தூரத்தினை 40 நாட்களில் சைக்கிளில் சுற்றி சாதனை படைக்கும் நோக்கில் ஆரம்பித்த பயணமானது 19 ஆவது நாளான இன்று (10.08.2023) வவுனியா ஓமந்தை மத்தியகல்லூரி பழைய மாணவர்களான சேமமடுவை சேர்ந்தவர்கள் லண்டனில் இருந்து இந்தியா வருகை தந்திருந்த ஞானேஸ் மற்றும் குஞ்சன் குடும்பத்தினரும் திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் வரவேற்பளிக்கப்பட்டு கௌரவம் வழங்கி வைத்திருந்தார்கள்.
இலங்கை வடமாகாணம் வவுனியாவை சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபன் என்பவர் இந்தியாவில் சாதனை பயணத்தினை கடந்த மாதம் (23.07.2023) சென்னை மாநகரின் மெரீனா கடற்கரையில் “மரங்கள் எங்கள் உயிர். மரம் வளர்ப்போம். இயற்கையை காப்போம்” எனும் பதாதையை சைக்கிளில் தாங்கிய வண்ணம் தனது இந்தப் பயணத்தை ஆரம்பித்திருந்தார்.
இந்த பயணத்தில் தமிழ் நாட்டின் 38 மாவட்டங்களூடாக பிரதாபன் பயணிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.