முல்லைத்தீவில் இந்நிய மீனவர் ஒருவரின் உடலம் ஒன்று இன்றைய தினம் கரை ஒதுங்கியுள்ளது.
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியிலே அடையாளம் தெரியாத மீனவர் குறித்த உடலம் கரையொதுங்கியுள்ளது.முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள ராணுவ முகாம் அமைந்துள்ள பகுதி கடற்கரையிலேயே குறித்த சடலம் தெப்பம் ஒன்றில் மிதந்து வந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. இதில்உள்ள கான்களில் இந்தியாவின் தெலுங்கு மொழிகள் எழுதப்பட்ட அடையாளங்கள் காணப்படுகின்றன.
குறித்த சடலம் கரையொதுங்கியுள்ளமை தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தினை மீட்பதற்காக நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்து சடலத்தினை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள் குறித்த உடலமானது ராணுவத்தினரின் முகாமுக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளதும் குறிப்பிடதக்கது.