கிளிநொச்சியில் பாரிய விபத்து ! ஒருவர் பலி ,ஐவர் தீவிர சிகிச்சை பிரிவில்..

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் 8 பேர் படுகாயமடைந்துள்ள சம்பவம் ஒன்று.இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த அரச பேருந்துடன், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி எதிரே பயணித்த வான் மோதியே குறித்த விபத்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பேருந்து விதியில் பயணித்த மாடுகளுடன் மோதிய பின்னரே குறித்த  வாகனத்துடன்  மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில்  வவுனியாவை சேர்ந்த 50 வயதுடைய திருமணி திருச்செல்வம் எனும் பெண் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்தவர்களில் ஐவர் கிளிநொச்சி வைத்தியசாலை தீவிர சிகிச்சைப்பிரிவில்   சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, குறித்த விபத்தில் 8 மாடுகளும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Latest news

Related news