கனடா படுகொலை தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் தாயார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் படுகொலை செய்யப்பட்ட நான்கு பிள்ளைகளின் தாயார் இந்நாட்டின் பொல்கஹவெல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என தெரியவந்துள்ளது.

35 வயதான தர்ஷனி டிலந்திகா ஏகநாயக்கவின் தாயார் கண்ணீர் மல்க செய்தி தளம் ஒன்றிற்கு  தெரிவித்தார்.

“ஏதோ நடக்கப் போகிறது என்று உணர்ந்தேன். சவப்பெட்டிகளை கனவில் பார்த்தேன். ஏதாவது பெரிய பிரச்சனையாக இருக்குமோ என நினைத்தேன். பௌத்தத்தை தீவிரமாக கடைப்பிடித்தார். விகாரை விகாரையாக சென்ற பிள்ளைதானே..”

கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பெர்ஹெவன் இல் இலங்கை குடும்பம் ஒன்று வாழ்ந்த வீட்டில் இந்த படுகொலை இடம்பெற்றுள்ளது. கடந்த புதன்கிழமை கனடா நேரப்படி இரவு 11 மணிக்கு சற்று முன்னர் இந்த படுகொலை சம்பவம் இடம்பெற்றிருந்தது.

சம்பவத்தின் போது 35 வயதுடைய தாய், அவரது நான்கு பிள்ளைகள் மற்றும் அவர்களுடன் வசித்த மேலும் இரு இலங்கையர்களும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது குழந்தைகளின் தந்தையான 38 வயதுடைய தனுஷ்க விக்கிரமசிங்க வீட்டுக்கு வந்தபோது, ​​வீட்டில் விளக்குகள் வழமைபோல் எரியவில்லை.

அவர் வீட்டுக்குள் நுழைந்தவுடனேயே யாரோ அவரைத் தாக்கியதால், இருள் சூழ்ந்திருந்ததால், அப்போது தாக்கிய நபரை அடையாளம் காண முடியவில்லை. எவ்வாறாயினும், தம்மைத் தாக்கிய இலங்கையைச் சேர்ந்த ஃபேப்ரியோ டி சொய்சா என அடையாளம் கண்ட தனுஷ்க, அவரது குடும்ப உறுப்பினர்கள் குறித்து கேட்டுள்ளார்.

 

சிறிது நேரம் கழித்துதான் தனுஷ்கவின் கைகள் இரத்த வெள்ளத்தில் கிடந்ததையும், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதையும் உணர்ந்தார். அப்போது, ​​தனுஷ்க ஃபேப்ரியோவின் கையில் இருந்த கத்தியை பறித்துக் கொண்டு, தனக்கு உதவுமாறு கூச்சலிட்டவாறு வீட்டை விட்டு வெளியே ஓடியுள்ளார்.

911 என்ற அவசர அழைப்பு இலக்கத்திற்கு இரவு 10:52 மணிக்கு அவசர நிலை குறித்து அழைப்பொன்று வந்ததாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்தனர்.

 

அழைப்பினை ஏற்படுத்திய நபர் 911 என்ற இலக்கத்திற்கு அழைத்து உதவி கோருமாறு கத்தியபடி உள்ளதாக தெரிவித்தாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

சாந்தி ரமேஷ் (அயல் வீட்டுப் பெண்) –

 

“வீட்டுக்கு வரும் வழியில் ஒருவர் தரையில் அமர்ந்து அழுதுகொண்டிருப்பதைப் பார்த்தேன். அவரை இரண்டு பொலிஸ்காரர்கள் அழைத்துச் சென்று பொலிஸ் காரில் ஏற்றினார்கள். அப்போது இப்படியொரு சோகம் நடந்ததாகத் தெரியவில்லை. இது மிகவும் சோகமானதும், துயரமானதும் சம்பவம். “

கொலைச் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த ஒட்டாவா பொலிஸார் முதலில் காயமடைந்த தனுஷ்கவை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

 

அதன்பிறகு, அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்ப நண்பர் ஒருவர் வீட்டில் கொல்லப்பட்டதை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

 

பொலிஸ் பிரதானி – எரிக் ஸ்டப்ஸ் –

 

“எங்கள் குழு உடனடியாக அனுப்பப்பட்டது. அதிகாரிகள் சந்தேக நபரை அடையாளம் கண்டு உடனடியாக கைது செய்தனர். அதிகாரிகள் வீட்டிற்குள் நுழைந்து சோதனை செய்தனர். அப்போதுதான் இந்த சம்பவத்தில் இறந்த 6 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர். இந்த குடும்பங்கள் கனடாவுக்கு புதிதாக வந்தவர்கள். அவர்கள் இலங்கையில் இருந்து வந்தவர்கள். உயிரிழந்த பெண்ணின் கணவர் படுகாயமடைந்துள்ளார்.. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது, ஆனால் தற்போது அவரது உடல்நிலை சீராகி உள்ளது. இந்த கொடூர சம்பவத்திற்கு கூரிய ஆயுதம் பயன்படுத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.”

Latest news

Related news