வட்டுக்கோட்டை இளைஞன் கொலை.. கடற்படை செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த மனித உரிமைகள் ஆணைக்குழு.
வட்டுக்கோட்டை இளைஞன் கொலை தொடர்பில் கடற்படையினரின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் யாழ் பிராந்திய அலுவலகம் தனது விசாரணைகளை நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பித்துள்ளது.
வட்டுக்கோட்டை – மாவடி பகுதியை சேர்ந்த தவச்செல்வம் பவித்திரன் (வயது 23) என்ற குடும்பஸ்தர் குழு ஒன்றினால் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
குறித்த சம்பவத்துடன் கடற்டையினரின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகம் ஊடகங்களில் வெளியாகிய செய்திகள் மற்றும் காணொளிகளின் அடிப்படையில் தனது சொந்தப் பேரணையாக எடுத்து குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது..
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தரும் அவரது மனைவியும் காரைநகரில் இருந்து வட்டுக்கோட்டை – மாவடியில் உள்ள வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தவேளை பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகாமையில் இரண்டு கார்களில் ஆயுதங்களுடன் நின்ற சிலர் அவர்களை வழி மறித்தனர்.
இதன்போது இருவரும் தப்பித்து கடற்படை முகாமுக்குள் உள்நுழைந்தனர். இந்நிலையில் கடற்படையினர் அவர்களை வெளியே விரட்டினர். இதனால் அவர்கள் வெளியே வந்தவேளை, ஒரு காரில் மனைவியையும், அடுத்த காரில் குறித்த நபரையும் ஏற்றிக்கொண்டு குறித்த குழு அங்கிருந்து சென்றது.
பின்னர் மனைவியை சித்தங்கேணி சந்தியில் இறக்கி விட்டனர். அதன்பின்னர் மனைவி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்வதற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் குறித்த நபரை கடத்திச் சென்றவர்கள் அவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்ட பின்னர் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையினுள் காரில் சென்று, வைத்தியசாலையில் உள்ள மாமரத்துக்கு கீழே அவரை தூக்கி வீசிவிட்டு சென்றனர்.
இந்நிலையில் வைத்தியசாலையில் இருந்த சுகாதார பணியாளர்கள் இது குறித்து வைத்தியருக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தினர்.
அவ்விடத்திற்கு வந்த வைத்தியர் நோயாளர் காவுவண்டி மூலம் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை சில நிமிடங்களில் அவர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த குடும்பஸ்தரின் மரணம் சித்திரவதை செய்யப்பட்டு கூரிய ஆயுதங்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் என யாழ் போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது
இன் நிலையில் வட்டுக்கோட்டை இளைஞனை கடத்தி கொலை செய்வதற்கு கடற்படையினரும் ஒரு வகையில் காரணம் என கொலை செய்யப்பட்டவரின் மனைவி குற்றம் சாட்டியுள்ள நிலையில், இளைஞனை கடத்துவதற்கு கடற்படையினர் உதவும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியது.
குறித்த காணொளியில் , இளைஞனும் மனைவியும் தஞ்சம் கோரி முகாமுக்கு ஓடி வருவதும் , அங்கு கடற்படையினர் அவர்களை தாக்குவதும் , வன்முறை கும்பல் கடற்படையின் கண் முன்னே முகாம் பகுதியில் வைத்தே கணவன் மனைவியை கடத்தி செல்வதும் பதிவாகியுள்ளது.
கடற்படையினர் துப்பாக்கிகளுடன் கடத்தல் காரர்களுக்கு உதவி செய்வது காணொளியில் தெளிவாக பதிவாகியுள்ள நிலையில் கடத்தலுக்கு கடற்படையினர் உதவினார்கள் என்ற குடுத்தாச்சா உயிரிழந்தவரின் மனைவி முன் வைத்துள்ள நிலையில் அது தொடர்பில் ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்தது.
என் நிலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை குறித்த கடற்படை முகாமுக்கு சென்ற மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய உத்தியோத்தர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ் ஊடகங்களில் வெளியாகிய செய்திகள் மற்றும் காணொளிகளின் அடிப்படையில் கடற்படையினரின் செயற்பாடுகள் தொடர்பில் அறிக்கை கேட்டுள்ளோம்.
அதுமட்டுமல்லாது குறித்த இளைஞனின் கொலை தொடர்பில் பொலிஸாசாரால் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தொடர்பிலும் விரிவான அறிக்கை கேட்டுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.