இந்த வருடத்தின் இறுதியில் அல்லது அடுத்த வருடத்தின் முற்பகுதியிலிருந்து மீண்டும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு எதிர்பார்ப்பதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுக்களின் பரிந்துரைகளும் கவனத்தில் கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.