மன்னாரில் 09 கோடியே 30 லட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத சொத்துக்கள் முடக்கம்‼️

மன்னார் தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த 43 வயதான நபரின், சின்னக்கடை பகுதியிலுள்ள கடைத் தொகுதியுடன் கூடிய வீடு, தலைமன்னாரில் உள்ள விசாலமான வீடு மற்றும் nissan X-trail ரக சொகுசு வாகனம் என்பன நீதிமன்ற உத்தரவின் பெயரில் முடக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் 2002ம் ஆண்டு அரச வீட்டுத் திட்டத்தை பெற்றுக்கொண்டதுடன், இரு படகுகளை வைத்து கடற்தொழில் செய்து சாதாரண குடும்பமாக வாழ்ந்துவந்த நிலையில், 2019ம் ஆண்டின் பின் திடிரென பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யுக்திய நடவடிக்கை மூலம் வடமாகாணத்தில் இவ்வாறு சொத்துக்கள் முடக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

Latest news

Related news