முள்ளிவாய்கால் பகுதியில் சுயேட்சை குழுவினரின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்றையதினம் (28.10.2024) காலை 10.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் சுயேட்சை குழுவாக மாட்டுவண்டி சின்னத்தில் களமிறங்கி இருக்கும் தமிழர் மரபுரிமை கட்சியினால் தேர்தல் விஞ்ஞாபனம் முள்ளிவாய்க்கால் நினைவு தூபியில் வைத்து மாவீரர்களுக்கும், இறந்த பொதுமக்களுக்கும் முதற்கணம் சமர்பணம் செய்து மாவீர்களின் பெற்றோர்களிடம் கையளித்து கட்சி உறுப்பினர்களால் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வெளியீட்டு நிகழ்வில் சுயேட்சை குழு வண்டில் சின்னத்தில் போட்டியிடும் நேசராசா சங்கீதன் கருத்து தெரிவிக்கும் போது,
இளய சமுதாயம் அரசியலை நோக்கி பயணிக்க வேண்டும் அடுத்த கட்ட அரசியலை ஆரம்பிக்க வேண்டும்.எனும் நோக்குடன் 2024 ஆம் ஆண்டு இடம்பெறும் பாராளுமன்ற தேர்தலில் இளைய தலைமுறையினரை நிறுத்தி இருக்கின்றோம்.அனுபவமிக்க புத்திஜீவிகளுடன் நாம் ஆலோசித்து அரசியலை ஆரம்பித்திருக்கின்றோம்.
எம் தேசத்தித்திற்காகவும் மக்களுக்காகவும் உயிர்தியாகம் செய்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி இன்று எமது அரசியல் பயணத்தினை ஆரம்பித்திருக்கின்றோம்.
யுத்தம் நடந்த காலப்பகுதியில் எனக்கு எட்டு வயது என்னுடைய தந்தை யுத்தத்தின் போது வீரச்சாவடைந்து விட்டார் .என்னுடைய தாயார் உடன் இந்த இடத்திலிருந்தே சென்றிருந்தோம். ஆனால் தமிழ் மக்களுக்கு இன்றுரை தீர்வு இல்லை.அடுத்த தலைமுறைக்கு வரலாறு கடத்தும் நோக்குடன் விட்ட இடத்திலிருந்தே எம் அரசியல் பயணம் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனும் நோக்கில் எனது தந்தையை இழந்த இடத்திலிருந்து மாவீரர்களின் பணியை தொடர வேண்டும் என அரசியல் பயணத்தை ஆரம்பித்திருக்கின்றோம்.
மக்களை கேடயமாக கொண்டு மக்களை சக்தியாகக் கொண்டு உரிமை குரலை எழுப்புவதற்கு இளைஞர்கள் நாம் நின்று இன்று எம் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளோம்.ஏனெனில் பெரிய பணம் படைத்தவர்கள் வருகின்றார்கள் காசை கொட்டி தேர்தல் விஞ்ஞாபனத்தை. வெளியிடுகின்றார்கள்.எமது தேசியம்,உரிமைகள் நசுக்கப்படுகின்றது.ஆகையால் எமது இளைஞர்கள் மாவீரர்களை நினைவுகூர்ந்து எமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டிருக்கின்றோம்.
உறவுகளே உங்களை நம்பி எங்களுடைய தேசியத்தை கொண்டு செல்லவேண்டிய கடமையோடு அரசியலில் நாம் குதித்திருக்கின்றோம்.மக்கள் நலத்தை நம்பியே நாம் அரசியலுக்குள் வந்துள்ளோம்.வேறு எவ்வித பண பலமோ, படைபலமோ இல்லாமலே வந்திருக்கின்றோம்.தென்னிலங்கை அரசியலுக்கு சோரம் போகாமல் இளைஞர்களுக்காக குரல் கொடுப்போம் என தெரிவித்திருந்தார்.