எதிர்வரும் நவம்பர் 27, தமிழ்த்தேசிய மாவீரர் நாளின் முன்னாயத்தப் பணிகளின் ஆரம்பமாக ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்றையதினம் சிரமதானப் பணிகள் மாவீரர் பணிக்குழுவின் வழிகாட்டலில் ஆரம்பிக்கப்பட்டன.
ஆலங்குளம் மாவீரர் பணிக்குழுவினால், முறைமைப்படுத்தப்பட்ட வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட மேற்படி சிரமதானப் பணிகளில் தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்