மாமியார் மீது துப்பாக்கி பிரயோகம்!! மருமகன் தலைமறைவு

வவுனியா சுந்தரபுரம் பகுதியில் இளைஞர் ஒருவர் மேற்கொண்ட நாட்டுத்துப்பாக்கி பிரயோகத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்

நேற்றையதினம் குறித்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற அவரது மருமகன் நாட்டுத்துப்பாக்கியால் பெண்ணின் வாய்ப்பகுதியில் சுட்டுள்ளார். இதனால் படுகாயமடைந்த பெண் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவத்தில் சுந்தரபுரம் பகுதியைசேர்ந்த 54 வயதான பெண்ணே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

தாக்குதலை மேற்கொண்ட நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

Latest news

Related news