பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்றையதினம் முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்
நேற்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் தாெகுதியில் தமிழரசுக்கட்சி சார்பாக போட்டியிட்டு மக்களின் அமோக ஆதரவுடன் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராச ரவிகரன் இன்று (15.11.2024) காலை 11.15 மணியளவில் இறுதிப்போரில் உயிரிழந்த மக்கள் நினைவான முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு சென்று போரில் உயிரிழந்த மக்களுக்காக வணக்கம் செலுத்தியிருந்தார்.
வெற்றிவாகை சூடிய பாராளுமன்ற உறுப்பினரை முல்லைத்தீவு மக்கள் இன்று முல்லைத்தீவு நகரில் மாலை அணிவித்து வரவேற்றதுடன் வெடிகொழுத்தி வெற்றி கொண்டாடட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடதக்கது.