சீரற்ற வானிலை! வெள்ளக்காடாகிய நகரம்!வீடுகள் வியாபாரநிலையங்கள் வெள்ளத்தில் மூழ்கியது! 

வவுனியாவில் இன்று மாலைபெய்த கடும்மழை காரணமாக வவுனியா நகரப்பகுதி நீரில் மூழ்கியதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டது.

வவுனியாவில் இன்றுகாலை முதல் மழை பெய்துவருவதுடன்,மாலை 4 மணியில் இருந்து இரண்டு மணித்தியாலங்கள் இடைவிடாது கனமழை பெய்தது.

குறித்த மழைகாரணமாக வவுனியா நகரப்பகுதி முற்றாக வெள்ளத்தில் மூழ்க்கியதுடன், வியாபாரநிலையங்கள் மற்றும் வீடுகளுக்குள் வெள்ளநீர் உட்புகுந்துள்ளது.

குறிப்பாகவைரவபுளியங்குளம்,குருமன்காடு,வேப்பங்குளம்,நெளுக்குளம்,பட்டாணிச்சூர் ஆகிய பகுதிகளில் உள்ள பிரதான வீதிகள் முற்றாக வெள்ளநீரில் மூழ்கியதுடன்,அதனூடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வவுனியாக்குளம் வான் பாய்ந்துவருவதனால் பூந்தோட்டம் சந்தியில் அமைந்துள்ள பாலத்தை மேவி வெள்ளநீ்ர் வெளியேறிவருகிறது. இதனால் குறித்த பாதையூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்த மழைவீழ்ச்சியால் நெற்பயிர்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளதுடன் மாவட்டத்தின் அனைத்துப்பகுதிகளும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது.

மாலை 6 மணிக்குப்பின்னரும் மழைதொடர்ச்சியாக பெய்துவரும் நிலையில் தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளப்பாதிப்புக்கள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.

Latest news

Related news