கராத்தே போட்டியில் பதக்கங்களை பெற்று சிறப்பாக செயற்பட்ட கராத்தே வீரா வீராங்கனைகளுக்கான கௌரவிப்பு நிகழ்வு பிரமண்டு வித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
நிப்போன் கராட்டி சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த காலங்களில் இருந்து 2025 ஆம் ஆண்டு வரைக்கும் இடம்பெற்ற கராத்தே போட்டியில் பதக்கங்களை பெற்று சிறப்பாக செயற்பட்ட கராத்தே வீரா வீராங்கனைகளுக்கான கௌரவிப்பு நிகழ்வு வவுனியா பிரமண்டு வித்தியாலயத்தில் நேற்றையதினம் இடம்பெற்றிருந்தது.
குறித்த கௌரவிப்பு நிகழ்வில் மாணவர்களுக்கான பதக்கங்களும் , கௌரவ சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது. அத்துடன் சிலம்பு கலையின் பயிற்றுவிப்பாளர் வாபு மாஸ்டரின் ஏற்பாட்டில் பண்டையகால விளையாட்டு நிகழ்வுகளும் , கராத்தே மாணவர்களின் வீரதீர செயல்களும் இடம்பெற்றிருந்தது.
நிப்போன் கராத்தே சங்கத்தின் வடமாகாணத்தின் தலைவர் ஞா.ஞானகீதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் , கௌரவ விருந்தினராக இலங்கை கராத்தே சம்மேளனத்தின் செயலாளர் வி.எம்.வசாநாயக்க, சிறப்பு விருந்தினராக பிரமண்டு வித்தியாலய அதிபர் ஏ.மோகன், பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் த.விந்துஜன் மற்றும் விளையாட்டு கழகத்தினர், விளையாட்டு வீரர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.