வவுனியா மேயர்கிண்ணம்! சீருடை அறிமுகம்

வவுனியா மேயர்கிண்ண உதைபாந்தாட்ட சுற்றுப்போட்டிக்கான சீருடை அறிமுகம் செய்யும் நிகழ்வு வவுனியா பொது நூலக கேட்போர் கூட மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.

வவுனியா உதைபந்தாட்ட சங்கத்தின் அனுசரணையில் மேயர்கிண்ணம்2025 உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இன்றையதினம் வவுனியா மாநகரசபை மைதானத்தில் பிரமாண்டமாக ஆரம்பமாகவுள்ளது. 

8அணிகளை உள்ளடக்கிய இச்சுற்றுப்போட்டியில் ஏலத்தின் மூலம் அணிகளிற்கான வீரர்கள் ஏற்கனவே தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் வீரர்களுக்கான சீருடை அறிமுகம் செய்யும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்ட வவுனியா மாநகரசபை முதல்வர் சு.காண்டீபன் வீரர்களுக்கான சீருடைகளை அறிமுகம் செய்து வைத்திருந்தார்.அவற்றிற்கான அனுசரணையினை வர்த்தகர் இர்பான் வழங்கியிருந்தார்.

வவுனியா உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவர் நாகராஜன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில்,போட்டியிடும் அணிகளின் உரிமையாளர்கள் மற்றும் வீரர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

Latest news

Related news