புதிய அரசியல் கட்சியினை அடிமட்டத்தில் இருந்து கட்டியெழுப்பியுள்ளதாகவும், பல சவால்களுக்கு மத்தியில் அதன் தலைமை செயலகத்தை வெகுவிரைவில் திறக்கவுள்ளதாக ஜெயா சரவணா தெரிவிப்பு

புதிய அரசியல் கட்சி உருவாக்கப்பட்டு அதனை அடிமட்டத்தில் இருந்து கட்டியெழுப்பி உள்ளதாகவும், கட்சியின் தலைமைச் செயலகத்தை பல சவால்களுக்கு மத்தியில் மிக விரைவில் மட்டக்களப்பில் திறக்கவுள்ளதாக அதன் கட்சியின் ஸ்தாபகரான ஜெயா சரவணா தெரிவித்துள்ளார்.

குறித்த கட்சியின் ஸ்தாபகரால் இன்றையதினம் (12.11.2025) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நான் ஒரு கட்சியை உருவாக்கி வருவதாகவும் அக் கட்சியின் தலைமைச்செயலகம் மிக விரைவில் மட்டக்களப்பு மண்ணில் திறக்கப்பட இருப்பதாகவும் அச் செய்தியை என்னிடம் கேட்டு உறுதிப்படுத்தி சென்ற வாரம் ஊடகங்களில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. இந்த விடயத்தில் பல நாடுகளில் இருந்தும் பல ஆர்வலர்கள், நலன்விரும்பிகள், நண்பர்கள் எல்லோரிடமிருந்தும் அழைப்புகள் வந்தவண்ணமுள்ளன.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியில் இருந்து விலகி விட்டீர்களா? என்ன நடந்தது? என கேட்டிருந்தார்கள். சென்ற வருடம் ஓகஸ்ட் மாதம் அக் கட்சியில் இருந்தும் உபதலைவர் பதவியில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் உத்தியோக பூர்வமாக விலகிக் கொண்டேன். அத்துடன் அக் கட்சியின் இளைஞர் அணியான எனது கட்டுப்பட்டில் இருந்த அம்மான் படையணியானது நிரந்தரமாக கலைக்கப்பட்டுவிட்டது.

இன்று எனது ஒரு வருடத்திற்கு மேலாக எனதும் , என் அருமைத்தம்பிகளின் உழைப்பினாலும் எமது புதிய கட்சியை அடிமட்டத்தில் இருந்து கட்டியெழுப்பியுள்ளோம். இக் கட்சியானது விரைவில் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட இருக்கின்றது. என்பதனை கூறிக்கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.

எமது கட்சியானது என்ன நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது. எமது பயணம் எதை நோக்கியதாக இருக்கும் என்பதற்கான விடைகள் எமது கட்சியின் ஆரம்ப விழாவில் தெரியப்படுத்தப்படும் என்பதனை உறுதிப்பட தெரிவித்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.

Latest news

Related news