மின்சாரம் தாக்கி தாயும் மகனும் உயிரிழப்பு

கொழும்பு- கடுவெல பிரதேசத்தில் மின்சாரம் தாக்கித் தாயும் மகனும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

இந்தத் துயரச் சம்பவம் இன்று (22.06.2023) மாலை இடம்பெற்றுள்ளது.

45 வயதுடைய தாயாரும், 22 வயதுடைய மூத்த மகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். வீட்டில் பழுதடைந்த குளிர்சாதனப் பெட்டியை மூத்த மகன் திருத்திக் கொண்டிருக்கும் போது தாயார் அருகில் இருந்துள்ளார்.

இதன்போது மின்சாரம் தாக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மின்சாரம் தாக்கி தாயும் மகனும் உயிரிழப்பு: கொழும்பில் துயர சம்பவம் | Mother And Son Killed Electric Accident Colombo

தந்தையும், இளைய மகனும் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தமையால் இந்த அனர்த்தத்தில் அவர்கள் சிக்கவில்லை.

எனினும், வீட்டுக்கு வந்து சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த 48 வயதுடைய தந்தையும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

20 வயதுடைய இளைய மகனை விசாரணைக்குட்படுத்தி அவரிடம் வாக்குமூலம் பெற்ற பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Latest news

Related news