கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து பெண் ஒருவரை குடிவரவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக மேற்கொள்ளப்பட்ட நிதி மோசடி தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு 53 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

அதற்கமைய குறித்த பெண் இந்தியாவில் இருந்து இலங்கை திரும்பிய வேளையில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பத்தரமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.

1.3 மில்லியன் ரூபாய் பண மோசடி செய்ததாக குறித்த பெண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 

 

Latest news

Related news