நொவாயா கெசெட்டா (Novaya Gazeta) எனப்படும் செய்தித்தாளின் பிரபல பத்திரிகையாளரான யெலெனா மிலாஷினா (Yelena Milashina), அலெக்சாண்டர் நெமோவ் (Alexander Nemov) என்ற சட்டத்தரணியுடன் உள்ளூர் விமான நிலையத்திலிருந்து செச்சின் தலைநகர் குரோஸ்னி நகருக்கு நேற்று காலை பயணம் செய்து கொண்டிருந்தார்.
இதன்போது, ஆயுதங்களுடன் முகமூடி அணிந்திருந்த சிலர் அவரையும் அவரின் சட்டத்தரணியையும் காரை நிறுத்துமாறு கட்டாயப்படுத்தி, பின்னர் மிருகத்தனமாக அவர்களை தாக்கியுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான பிறகு அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கும் அவர்கள், மேலதிக சிகிச்சைக்காக மாஸ்கோவிற்கு விமானம் மூலம் அனுப்பப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிலாஷினா அந்த சட்டத்தரணியுடன் அரசியல் காரணங்களுக்காக அநியாயமாக துன்புறுத்தப்பட்ட ஒரு பெண்ணின் வழக்கில் நீதிமன்ற விசாரணையில் கலந்துகொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.
மாஸ்கோவின் சில ரஷ்ய அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இத்தாக்குதலைக் கண்டித்து, உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
ரஷ்யாவில் தடை செய்யப்பட்டுள்ள மெமோரியல் எனும் போராளி குழுவென்றே தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிலாஷினா மற்றும் நெமோவ் ஆகியோர் முகத்தில் கொடூரமாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து, அவர்கள் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டிதோடு மட்டுமில்லாமல், அவர்களது உபகரணங்களையும் அபகரித்து, அவற்றை அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். அத்தோடு அவர்களின் தலைமுடியையும் அகற்றியுள்ளார்கள்.
உடனடியாக அங்கிருந்து வௌியேறுமாறும், இனி எதுவும் எழுதக்கூடாது எனவும் மிலாஷினாவிற்கு மெமோரியல் குழு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும்போது வெளியிடப்பட்டிருக்கும் அவரது புகைப்படத்தில், பச்சை சாயம் பூசப்பட்டு, தலைமுடி வெட்டப்பட்ட நிலையில் அவர் படுக்கையில் அமர்ந்திருக்கிறார். அவரது கையில் கட்டுகள் போட்டப்பட்டுள்ளன.
அவரது விரல்கள் பல உடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மிலாஷினாவின் பத்திரிகையின் உரிமம் கடந்த ஆண்டு ரஷ்யாவில் பறிக்கப்பட்டது. செச்சினியாவில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களை குறித்து பல வருடங்களாக மிலாஷினா எழுதி வந்தார்.