கொழும்பில் கோர விபத்து! 5 வயது சிறுவன் பலி

கொழும்பு-மகரகமவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன் அவரின் தந்தை படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்து நேற்றிரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வேகமாகப் பயணித்த காரும் மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற 36 வயதுடைய குடும்பஸ்தரும், அவருடன் பயணித்த 5 வயது மகனும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளார்.

Latest news

Related news