இலங்கையில் பெரும் சோக சம்பவம்: பரிதாபமாக உயிரிழந்த மாணவர்கள்-வெளியான அதிர்ச்சிக் காரணம்!

மொனராகலையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இச் சம்பவம் மொனராகலை, தம்பகல்ல பிரதேசத்தில் நேற்றைய தினம்  (27-07-2023) மாலை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த இரு மாணவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் தம்பகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த தருஷ சந்தீப மற்றும் ருவன்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சஸ்மித எஷான் ரணவீர ஆகிய பாடசாலை மாணவர்களே உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

Latest news

Related news