பாகிஸ்தானில் அரசியல் பொதுக்கூட்டம் ஒன்றின் இன்றையதினம் குண்டு வெடித்ததில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் – கைபர் பக்துன்வா மாகாணத்தில் ஜமியத் உலமா – இ – இஸ்லாம் பசல் என்ற அரசியல் கட்சி சார்பில் இன்று(30) பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அப்போது திடீரென குண்டு வெடித்ததில் இதில் கட்சியின் முக்கிய பிரமுகர் உள்பட சுமார் 40 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசியல் கூட்டத்தை குறி வைத்து குண்டு வெடிப்பு சம்பவம்
மேலும் 130 இற்கும் மேற்பட்டோர் வரையில் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தகவலறிந்த உடன் விரைந்து வந்த மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த குண்டு தாக்குதலில் பாகிஸ்தானின் பஜௌர் நகரில் அரசியல் கூட்டத்தை குறி வைத்து இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.