ரில்வின் சில்வா அவ்வாறு கூறியிருக்க மாட்டார்.
உண்மையில் நாம் ஒரு அரசியல் கட்சி என்றவகையில் வடகிழக்கு மற்றும் மலையக தமிழ்மக்களுக்கு அரசியல் கலாசார அசாதாரணங்கள் இந்த நாட்டில் ஏற்ப்பட்டதென்று ஏற்றுக்கொள்கின்றோம். அத்துடன் அதிகாரபகிர்வு தொடர்பாக ரில்வின் சில்வா அவ்வாறான ஒரு கருத்தை கூறியிருப்பார் என்று நான் நினைக்கவில்லை. என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தருமான விமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…..
ஜனாதிபதித்தேர்தலுக்கு பின்னர் இந்தப்பகுதியில் எமக்கான ஆதரவாளர்கள் அதிகரித்துள்ளனர்.இதேவேளை தமிழ்மக்களின் அதிகாரபகிர்வு தொடர்பாக ரில்வின்சில்வா ஒரு அறிக்கை விட்டது தொடர்பாக நான் கேள்விப்படவில்லை. அவ்வாறான ஒரு கருத்தை ரில்வின் சில்வா சொல்லியிருப்பார் என்று நான் நினைக்கவில்லை.
உண்மையில் நாம் ஒரு அரசியல் கட்சி என்றவகையில் வடகிழக்கு மற்றும் மலையக தமிழ்மக்களுக்கு அரசியல் கலாசார அசாதாரணங்கள் இந்த நாட்டில் ஏற்ப்பட்டதென்று ஏற்றுக்கொள்கின்றோம்.
இலங்கையில் தேசிய ஒற்றுமை இல்லை என்ற பிரச்சனை உண்டு.
ஆனால் கடந்தகாலங்களில் நாம் சொன்னோம் என பாரியபொய்களை சொன்னார்கள். முஸ்லீம்கள் தாடி வளர்க்கமுடியாது,பள்ளிசெல்லமுடி யாது, என்றெல்லாம் சொன்னார்கள். நான் நினைக்கிறேன் இந்தகருத்தும் அவ்வாறா ஒன்றாக இருந்திருக்கும் என்று.
இலங்கையில் அனைவருக்கும் சமமான உரிமை உண்டு என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். அது எமது கொள்கைகளிலும் ஒன்று. அடுத்து அனைவருக்குமான நீதி சமமானதாக இருக்கவேண்டும். புத்தகத்தில் மாத்திரம் அல்ல செயற்ப்பாட்டிலும் அது இருக்க வேண்டும்.
தமிழ் முஸ்லீம் மக்களின் கலாச்சார உரிமைகள் ஒழுங்காக பாதுகாக்கப்படவில்லை அதை ஏற்றுக்கொள்கின்றோம். அதனைபாதுகாப்பதற்காகவே 13 வது திருத்தம் இந்தியாவால் கொண்டுவரப்பட்டிருந்தாலும் எந்த மாற்றமும் ஏற்ப்படவில்லை. ஆனால் தமிழ் முஸ்லீம் மக்கள் நினைக்கின்றார்கள் அந்த சீர்சிருத்தம் மாத்திரம் இருந்தால் போதும் என்று.
ஆனால் நாங்கள் புதிய ஒரு அரசியல் யாப்பினை கொண்டுவருவோம். அதனூடாக அனைவரது உரிமைகளும் பாதுகாக்கப்படும். அதுவரைக்கும் மாகாணசபை முறைமையை பாதுகாப்போம்.அந்த தேர்தலும் நடாத்தப்படும்.
கடக்கின்ற ஒருவருடத்திற்குள் மிகச்சிறந்த விவாதங்களுக்கு பின்னர் பலரது ஆலோசனைகளை பெற்று சரியான ஒரு அரசியலமைப்பு முறையினை இந்த நாட்டில் உருவாக்குவோம்.
அத்துடன் காணாமல் ஆக்கப்பட்ட லலித் குகன் மற்றும் திருகோணமலையில் காணாமல் ஆக்கப்பட்ட மாணவர்கள் தொடர்பாக தற்போதே விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம். நாங்கள் ஆட்சிக்கு வந்து 3 வாரங்களே ஆகின்றது. எனினும் இதற்கான விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம். அத்துடன் அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி ஏற்கனவே தெரிவித்துள்ளார். என்றார்.