வவுனியாவில் சுமூகமாக இடம்பெறும் வாக்களிப்பு! பத்துமணி வரை 30 வீதமாக பதிவு!! 

ஜனாதிபதித்தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7மணிமுதல் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகின்றது. அந்தவகையில் வவுனியாவில் காலை 10மணிவரை 30 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட அரசஅதிபரும் தேர்தல் தெரிவித்தாட்சி அலுவலருமான பி.எ.சரத்சந்திர தெரிவித்தார்.

தேர்தல் தொடர்பாக வவுனியா மாவட்டசெயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…

 

வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களில் காலை முதல்மக்கள் ஆர்வத்துடன் தமது ஜனநாயக கடமையினை ஆற்றிவருவதை அவதானிக்க முடிகின்றது.

குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் 152 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் 128585 பேர் வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளனர். நேற்றயதினம் காலை அனைத்து நிலையங்களுக்குமான வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்குச்சீட்டுக்கள் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் இதுவரை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் அசம்பாவிதங்கள் எவையும் இன்றி சுமூகமான முறையில் வாக்களிப்பு செயற்ப்பாடுகள் இடம்பெற்றுவருகின்றது.

 

இதேவேளை வவுனியா சைவப்பிரகாசா மகளீர் கல்லூரியில் வாக்கெண்ணும் பணிகளுக்கான அனைத்து ஏற்ப்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது. மாலை 6 மணியளவில் தபால் வாக்குகள் எண்ணுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

 

இதேவேளை காலை 10மணிவரை 30 வீதமான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.இதேவேளை பாதுகாப்பு கடமைகளில் பொலிசார் மற்றும் ஊர்காவற்படையினர் ஈடுபட்டுவருகின்றனர்.

Latest news

Related news