சலுகை அரசியலை இல்லாமல் செய்வதை நோக்கமாக கொண்டுள்ளோம்: எமில்காந்தன்

சலுகை அரசியலை இல்லாமல் செய்வதை நோக்கமாக கொண்டுள்ளோம். பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் பல தேவைகளை அடிப்படையாக கொண்டு சலுகை அரசியல் தலைதூக்கி நிற்கிறது. தேர்தல் அறிவித்தவுடன் அனேகமான அரசியல் கட்சிகள் மக்களுக்கு அதை இதை கொடுத்து வாக்கினைப் பெற முயற்சிக்கின்றன. அந்த நிலமையை மாற்ற வேண்டும் என வன்னித் தேர்தல் தொகுதியில் சுயேட்சைக் குழு 7 இல் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் எமில்காந்தன் தெரிவித்தார்.

வவுனியா, குருமன்காடு பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (18.10) இடம்பெற்ற வேட்பார் அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த கால கடுமையான காலங்களை எல்லாம் கடந்து மக்களுடைய அபிவிருத்தி மற்றும் தொழில் ரீதியான வளர்ச்சி கருதி ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்து அதன் ஊடாக கடந்து இரண்டு வருடங்களாக கிராமங்களில் பல வேலைகளை செய்தோம். அரசியல் ரீதியாக ஒரு மாற்றத்தின் இலங்கை நோக்கி பயணித்து வந்தோம். இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டதும் எமது கட்சி பதிவு செய்வதற்கு காலம் போதியதாக இல்லாமையால் சுயேட்சையாக போட்டியிடுகின்றோம். சுயேட்சைக் குழு 7 இல் கோடரி சின்னத்தில் வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிடுகின்றோம்.

சலுகை அரசியலை இல்லாமல் செய்வதை நோக்கமாக கொண்டுள்ளோம். இல்லாமை என்பது தலை தூக்கி நிற்கும் நேரத்தில் இல்லாமையை தீர்ப்பதற்காக வேலை செய்கின்றோம். பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் பல தேவைகளை அடிப்படையாக கொண்டு சலுகை அரசியல் தலைதூக்கி நிற்கிறது. தேர்தல் அறிவித்தவுடன் அனேகமான அரசியல் கட்சிகள் மக்களுக்கு அதை இதை கொடுத்து வாக்கினைப் பெற முயற்சிக்கின்றன. அந்த நிலமையை மாற்ற வேண்டும்.

அரசியல் கட்சி என்ற வகையில் சாராயப் பாவனையை கட்டுப்படுத்தி மது ஒழிப்பை முன்னெடுப்பதும் எமது கட்சியின் நோக்கமாகும். தொழில் அபிவிருத்தி என்பது அந்ததந்த மாவட்டம் சார்ந்து அங்குள்ள வளங்களை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கபட வேண்டும்.

ஆட்சியாளர்கள் ஒவ்வொரு கொள்கையினை வைத்திருப்பார்கள். 13 வது திருத்தத்தை தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் எமது கடமை அதிகாரப் பகிர்வை எங்களுக்கு ஏற்றவாறாக அவர்களை ஏற்றுக் கொள்ளவைப்பதே ஆகும். தமிழ் மக்களது பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும். அந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு ஒவ்வொரு பிரஜைகளும் முயற்சிக்க வேண்டும். மக்கள் தமது சொந்த காலில் நிற்க வேண்டும். அவ்வாறான நிலையை ஏற்படுத்தி இனப் பிரச்சனையை தீர்க்க நாமும் தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம்.

 

அரசாங்கத்துடன், இணைந்து எமது மக்களது பிரச்சனைகளை தீர்த்து மக்களது அபிலாசைகளை முன்னகர்த்தக் கூடியதாகவே எமது திட்டங்கள் இருக்கும். மறாக எமது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அரசியல் செயற்பாடுகளுக்கு நாம் ஒரு போதும் ஆதரவு வழங்க மாட்டோம். குறிப்பாக எமது மக்களுக்கு காணிப் பிரச்சனை, தொல்பொருட் திணைக்களத்தின் பிரச்சனை எனப் பல பிரச்சனைகள் உள்ளது. அரசாங்கத்துடன் இணைந்து அதனை தீர்ப்பதற்கே முயற்சிப்போம். அதனை தீர்ப்பதற்கோ அல்லது அதனை தடுத்து நிறுத்துவதற்கான செயற்பாட்டை முன்னெடுப்போம்.

எமது கட்சியில் இணைந்து பயணிப்பவர்கள் தமது தேவையில் தன்னிறைவு கண்டவர்களாக இருப்பார்கள். மக்களுக்கு அதிகமான தேவைப்பாடுகள் உள்ளது. எதிர் கட்சியில் இருந்து கொண்டும் செய்திருக்க வேண்டிய வேலைப்பாடுகள் அதிகமாகவுள்ளது. ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று பார்க்கும் போது அந்த நிலமை புரிகிறது. இதனால் கடந்த கால மக்கள் பிரதிநிதிகள் மீது மக்கள் அதிருப்தி கொண்டவர்களாகவுள்ளனர்.

 

அதற்கு ஏற்ற வகையின் வன்னியின் மூன்று மாவட்டங்களிலும் நாம் வேட்பாளர்களை பொருத்தமாக நியமித்துள்ளோம். மாற்றத்திற்கு ஏற்ற வகையில் எமது குழாம் உள்ளது. அதற்கான ஆணையை மக்கள் தருவார்கள் என நம்புகின்றோம். எனவே எதிர்வரும் தேர்தலில் எமக்கு வாக்களித்து உங்களுக்கானவர்களை தெரிவித்து செய்து புதிய மாற்றத்தை அனுபவியுங்கள் எனத் தெரிவித்தார்

Latest news

Related news